மனிதர்கள் உண்ணும் உணவுகளில் எவற்றை நாய்களும் உண்ணலாம்?

Spread the love

சாக்லெட், பால் போன்ற மனிதர்கள் உண்ணும் உணவுகளில் பல, நாய்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.

நாய்களைச் செல்லப்பிராணியாக வைத்திருப்போர் அவற்றுக்கு அவர்கள் உண்ணும் உணவுகளில் எவற்றைத் தரலாம்?

  • தர்பூசணி (Watermelon)

தர்பூசணிப் பழத்தில் வைட்டமின் A, B6, C, பொட்டாசியம் ஆகிய சத்துகள் உண்டு. சூடான நாளன்று அவற்றை உறைய வைத்து நாய்களுக்குக் கொடுக்கலாம்.

ஆப்பிள்களில் உள்ள வைட்டமின் A, C, ஒமேகா-3, ஒமேகா-6, antioxidant, நார்ச்சத்து, flavonoids, polyphenols ஆகியவை நாய்களுக்குச் சத்து சேர்க்கும். ஆனால், ஆப்பிள்களில் உள்ள விதைகளை அகற்றவேண்டும் – விதைகளில் சையனைட் (CYANIDE) இருக்கலாம்.

  • பசலைக் கீரை

பசலைக் கீரையில் antioxidants, வைட்டமின் K ஆகியவை உள்ளன. நாய்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்ட அது உதவும்.

நாய்களும் கோழி உண்ணலாம், அவற்றுக்குச் சமைத்த கோழியை அளிப்பதே நல்லது. கோழியில் புரதச்சத்து உண்டு. சமைக்காத கோழி, முட்டை வகைகளில் கிருமிகள் இருக்கும்.

சோற்றுடன் கீரை, கோழி ஆகியவற்றைக் கலந்தும் நாய்களுக்கு உணவாக அளிக்கலாம்.

சால்மன் போன்ற கடல் மீன் வகைகளின் உடலில் பாதரசம் (mercury) குறைவாக உள்ளதால் அவற்றை நாய்களுக்கு அளிப்பது பாதுகாப்பானது. அவற்றில் புரதச் சத்து உண்டு.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *