மனத்தளவில் உங்கள் வயது என்ன? – TamilSeithi News & Current Affairs

Spread the love


Images

  • happy

    படம்: PIXABAY

ஒருவரின் வயது என்னவாக இருந்தாலும் மனத்தளவில் இளமையாக உணர்பவர்கள் பொதுவாக ஆரோக்கியமானவர்கள் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

“மனத்தளவில் உங்களுக்கு என்ன வயது?” என்ற கேள்வியின்வழி ஒருவரின் ஆரோக்கியம், நலன் போன்றவை குறித்து அதிகம் தெரிந்துகொள்ளலாம்.

ஒருவரின் வயதும் அவரது தோற்றமும் எப்போதுமே பொருந்திப் போகுமெனச் சொல்லமுடியாது.

50களிலிருந்து 70 வயது வரையிலானோர் சிலர் இளமையாகத் தோற்றமளிக்கலாம். சுறுசுறுப்பாகச் செயல்படலாம்.

தோலின் தன்மை, இரத்த அழுத்தம், நுரையீரலின் ஆற்றல் போன்ற அம்சங்களைக் கொண்டு ஆய்வாளர்கள் ஒருவரின் உடல் நலனை மதிப்பிடுகின்றனர்.

தங்களின் வயதைக் காட்டிலும் மனத்தளவில் இளமையாகத் தங்களைக் கருதுவோரின் மீள்திறன் பொதுவாகவே அதிகமாய் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

வயதானவர்களுக்கு இளவயது உணர்வைக் கொடுத்தபோது அவர்களின் செயல்பாடுகள் மேம்பட்டதாக ஆய்வில் தெரியவந்தது.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, துடிப்பான வாழ்க்கைச் சூழல், பரம்பரையில் வரும் உடல்வாகு-ஆகியவற்றின் மூலம் ஒருவர் தமது உண்மையான வயதைக் காட்டிலும் பல ஆண்டுகள் குறைவான உணர்வையும் உற்சாகத்தையும் பெறக்கூடும் என்றது ஆய்வு.

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *