மனச்சோர்வுக்கு உடற்பயிற்சி மருந்தா? – TamilSeithi News & Current Affairs

Spread the loveImages

  • Depression Exercise

கடும் மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கும் பெண்கள் உடற்பயிற்சியினால் பலனடையலாம் என்று புதிய ஆய்வொன்று கூறுகிறது.

ஒரே ஒரு முறை செய்யும் உடற்பயிற்சியினால் அவர்களின் உடலும் உள்ளமும் மனச்சோர்வைக் கையாளத் தயாராகிறது.

பயிற்றுவிப்பாளரின் உதவியோடு உடற்பயிற்சி செய்வதற்கும் சுயமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கும் வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உடற்பயிற்சிக்கும் மனநிலைக்கும் தொடர்பு இருப்பதாகப் பல ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துடிப்பான வாழ்க்கையை மேற்கொள்வோர் பொதுவாக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் என்றும் மனச்சோர்வு, பதற்றம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

மனச்சோர்வுக்கான அறிகுறிகளைக் குறைப்பதற்குக் கொடுக்கப்படும் மருந்துகளைப் போன்றே உடற்பயிற்சி பயனளிப்பதாகச் சில சோதனை முடிவுகளில் தெரியவந்தது.

உடற்பயிற்சி செய்வதால் பல்வேறு புரதச்சத்துகள் ரத்தத்தின் வழியாக மூளைக்குச் செல்லக்கூடும் என்று அறிவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அதனால் உணர்வுகள் மேம்படலாம் என்பது அவர்களின் ஊகம்.

எனினும் அறிவியல்ரீதியாக அதற்கு விளக்கம் கொடுக்கப்படவில்லை. 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *