மந்தனா, ஹர்மன்பிரீத் விலகல் * இந்தியா திரும்ப முடிவு

Spread the love

லண்டன்: ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் என இருவரும் ‘தி ஹன்டிரடு’ தொடரில் இருந்து விலகி நாடு திரும்ப உள்ளனர்.

இங்கிலாந்தில் பெண்களுக்கான ‘தி ஹன்டிரடு’ (100 பந்து) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்திய ‘டுவென்டி–20’ அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (3 போட்டி, 104 ரன்), ஸ்மிருதி மந்தனா (7 போட்டி, 167 ரன்) பங்கேற்கின்றனர். இதில் ஹர்மன்பிரீத் தசைப்பகுதி காயத்தால் அவதிப்படுகிறார்.

இதனிடையே அடுத்து ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்பதால், இதற்கு முன் குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் வகையில் இருவரும் நாடு திரும்ப உள்ளனர்.

மந்தனா வெளியிட்ட அறிக்கையில்,‘பைனல் வரை அணியுடன் இருக்கவே விருப்பமாக உள்ளது. ஆனால் வீட்டை விட்டு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் பல்வேறு தொடர்களில் அடுத்தடுத்து பங்கேற்க வேண்டும். இதனால் நாடு திரும்ப முடிவு செய்துள்ளேன்,’ என தெரிவித்துள்ளார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: