மதுபோதையில் இருந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்குச் சிறை

Spread the love

மதுபோதையில் இருந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் கேளிக்கைக்கூடப் பாதுகாவல் அதிகாரிக்கு 12 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாப் சுன் சியே (Yap Chun Chieh) என்ற அந்த 40 வயது ஆடவருக்கு 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

சம்பவம் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி நடந்தது.

24 வயதுப் பெண் ஒருவர் Club V5 Tycoon எனும் கேளிக்கைக் கூடத்தில் மது அருந்தினார்.

அவரை டாக்சியில் வீட்டுக்கு அனுப்பும்படி யாப்பிடம் கூறப்பட்டது.

இருப்பினும், ஆடவர், தனது மூன்று நண்பர்களின் தூண்டுதல் காரணமாக, பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்யத் திட்டமிட்டார்.

அவர், பெண்ணை D’Resort @ Downtown East எனும் உல்லாச விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, யாப்பும் இன்னோர் ஆடவரும், பெண் மீது பாலியல் செயல்கள் புரிந்ததாகக் கூறப்பட்டது.

மேலும் ஓர் ஆடவர், அதனைக் காணொளியில் பதிவுசெய்தார்.

பெண் பின்னர் விழித்துக்கொண்ட போது, ஏதோ நடந்திருப்பதை உணர்ந்தார். இருப்பினும், குழப்பத்தில் ஆழந்த அவர் காவல்துறையை அணுகவில்லை.

அவர் சில நாள்களுக்குப் பிறகு, யாப்பை அணுகினார்.

பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததை யாப் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்பட்டிருக்கலாம்.

பெண் மீது பாலியல் செயல் புரிந்த டே பூன் ஹுவாட்டிற்கு (Tay Boon Huat) 10 ஆண்டு, 3 மாதச் சிறைத்தண்டனையும் 5 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

பாலியல் செயல்களைப் பதிவுசெய்த கான் சூன் சாய்க்கு (Gan Soon Chai), 15 மாதச் சிறைத்தண்டனையும் 20,800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன.

சம்பவத்துடன் தொடர்புடைய 4-ஆவது ஆடவர் மீதான வழக்கு விசாரணை இன்னும் நடைபெறவில்லை.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *