மணப்பாறை: எம்.எல்.ஏ உறவினர் வீட்டில் வைக்கோல்போரில் மறைத்துவைக்கப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் | Rs 1 crore confiscated from relative of MLA house | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


Rs-1-crore-confiscated-from-relative-of-MLA-house

மணப்பாறை அருகே எம்.எல்.ஏ உறவினர் வீட்டிலிருந்து ரூ. 1 கோடி பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுபவர் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகர். இவரது நிறுவனத்தில் ஜேசிபி ஓட்டுனராக வேலை பார்க்கும் வலசுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவரது வீட்டிற்கு நள்ளிரவு சென்ற வருமான வரித்துறை இணை இயக்குநர் மதன்குமார் தலைமையிலான 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

image

அப்போது அழகர்சாமி வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த வைக்கோல் போரிலிருந்து ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

image

அதேபோல் அருகில் உள்ள் ஒப்பந்தகாரர் தங்கபாண்டியன், கோட்டைப்பட்டியில் ஆனந்த் என்ற முருகானந்தம் ஆகியோர் வீடுகளிலும், தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நள்ளிரவு சோதனை மேற்கொண்டனர். ஆனால் அந்த இடங்களில் பணம் ஏதும் கைப்பற்றவில்லை என கூறப்படுகிறது. மணப்பாறை பகுதியில் எம்.எல்.ஏ பணியாளர் வீட்டிலிருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: