போலந்தில் நாய்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் செயல்படுத்த முடிவு| Dinamalar

Spread the love


வார்சா: போலந்தில், நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு, ‘பென்ஷன்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

latest tamil news

ஐரோப்பிய நாடான போலந்தில், போலீஸ், எல்லைக் காவல்படை, தீயணைப்புப் படை உள்ளிட்ட பிரிவுகளில், நாய்கள், மற்றும் குதிரைகளும் பணியாற்றி வருகின்றன. இவை ஓய்வுபெற்ற பின், எதிர்காலத்திற்கு தேவையான உரிய பாதுகாப்பு அவற்றுக்கு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், அந்த விலங்குகளுக்கு உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கி, ஓய்வுபெற்ற பின், அவற்றுக்கு பென்ஷன் வழங்குவதற்கான புதிய சட்ட மசோதாவை, போலந்து உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.இதுகுறித்து, உள்துறை அமைச்சர் மேரியுஸ் கமின்ஸ்கி கூறியதாவது:இந்த சட்ட மசோதா, அடுத்த சில மாதங்களில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.

latest tamil news

இதற்கு, எம்.பி.,க்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளிப்பர் என நம்புகிறோம். இந்த பென்ஷன், ஓய்வுபெறும் விலங்குகளின் மருத்துவ செலவுகளுக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

AdvertisementTHANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *