போதைப்பொருள் சம்பந்தப்பட்ட திரைப்படத்தையும், நாடகத்தொடரையும் சிங்கப்பூர்த் தளத்திலிருந்து அகற்றியுள்ள Netflix

Spread the loveImages

  • netflix

    (படம்: Reuters)

போதைப்பொருள் சம்பந்தப்பட்ட திரைப்படம், நாடகத்தொடர் ஆகியவற்றை அதன் சேவையிலிருந்து Netflix அகற்றியுள்ளது.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அவற்றை அகற்றுமாறு உத்தரவிட்டதை அடுத்து, Netflix அவ்வாறு செய்துள்ளது.

Have a Good Trip: Adventures in Psychedelics, Cooked with Cannabis, ஆகியவற்றை அகற்றியதாக Netflix அதன் சுற்றுச்சூழல் சமூக ஆளுமை ஆய்வறிக்கையில் தெரிவித்தது.

திரைப்படங்கள், நாடகத் தொடர்கள் ஆகியவற்றை இணையம்வழி ஒளிபரப்பும் நிறுவனம் Netflix.

Netflix தளத்தில் உள்ள படங்கள், தொடர்கள் அந்தந்த நாடுகளைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

உள்நாட்டு தணிக்கைச் சட்டம், பதிப்புரிமை ஒப்பந்தம், ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அவை தெரிவு செய்யப்படுவதாகவும் Netflix தெரிவித்தது.

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து, அந்நிறுவனம் துருக்கி, சிங்கப்பூர் ஆகியவற்றிலிருந்து 4 படங்களை அதன் தளத்திலிருந்து அகற்றியது.  

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: