போதுமான உடற்பயிற்சியில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா? – TamilSeithi News & Current Affairs

Spread the love



Images

  • exercise1

    (படம்:Pixabay)

நீங்கள் 19 – 64 வயதுக்கு இடைப்பட்டவரா?

போதுமான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறீர்களா? 

ஒரு வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அல்லது ஒரு வாரத்துக்கு 75 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வது நல்லது.

வாரத்துக்கு இரண்டு அல்லது அதற்கு அதிகமான நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடலின் முக்கியத் தசைகளில் அதன் தாக்கம் தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வெகுநேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா?

சற்று நேரம் இருக்கையை விட்டு எழுந்து நடந்து பாருங்கள். களைப்பு நீங்கி சுறுசுறுப்பாக இயங்க அது உதவலாம்!

மிதமான உடற்பயிற்சி என்றால்…

  • துரித நடை
  • தண்ணீர் ஏரோபிக்ஸ் (aerobics)
  • சைக்கிளோட்டம்
  • டென்னிஸ்
  • மலை ஏற்ற நடவடிக்கை
  • சறுக்கு விளையாட்டு
  • கூடைப்பந்து

கடுமையான உடற்பயிற்சி என்றால்….

  • மெதுவோட்டம்
  • நெடுந்தொலை ஓட்டம்
  • நீச்சல்
  • மலைப் பகுதிகளில் சைக்கிளோட்டம்
  • காற்பந்து
  • சீருடற்பயிற்சி
  • கயிறு தாண்டுதல்
  • தற்காப்புக் கலை

தசைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் என்றால்…

  • எடை தூக்குதல்
  • யோகா
  • சொந்த எடை கொண்டு செய்யும் உடற்பயிற்சிகள் (sit-ups & push-ups)

அன்றாடம் குறைந்தது அரை மணி நேரம் மெதுவோட்டம், துரிதநடை போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது என வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். 





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *