பொய் சொல்கிறார் கோயல்: பினராயி விஜயன் பதிலடி!| Dinamalar

Spread the love


காசர்கோடு :”கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறுவது அப்பட்டமான பொய்,” என, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ஜான்சி ரயில் நிலையத்தில், கேரளாவைச் சேர்ந்த, இரு கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என்றும், பினராயி விஜயன் பொய் பேசுவதாகவும், ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பியுஷ் கோயல், நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.

latest tamil news

இந்நிலையில் நேற்று, கேரள மாநிலம் காசர்கோட்டில், பினராயி விஜயன் பேசியதாவது:கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என, பியுஷ் கோயல் வெட்கமின்றி, அப்பட்டமாக பொய் பேசியுள்ளார். கன்னியாஸ்திரிகள் என்பதற்காகவே, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆட்கள், கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதை மறுத்து, கன்னியாஸ்திரிகளின் ஆவணங்களை சரிபார்த்த பின், பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக பியுஷ் கோயல் கூறியுள்ளார். தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், அவர் பேசியிருப்பது அவமானகரமானது. குற்றவாளிகளை பாதுகாக்கும் செயல்; இது, ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை, மத்திய அரசு அமல்படுத்துகிறது என்பதற்கு சான்று. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *