பொது மக்களின் ஒத்துழைப்பின்றி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது – விசேட வைத்திய நிபுணர்

Spread the love

(செ.தேன்மொழி)

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் , பொது மக்களின் ஒத்துழைப்பின்றி வைரஸ் பரவலை கட்டுபடுத்த முடியாது என்று சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

கொரோனா தொடர்பில் உண்மையயை ஏற்றுக் கொள்ளுங்கள்: சுகாதார அமைச்சின் பேச்சாளர்  - Ibctamil

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் 1.82 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளதுடன் , இலங்கையில் ஐநூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த காலங்களில் நாட்டில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்த போதிலும், மீண்டும் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. 

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக எவ்வளவுதான் சட்டங்கள் அமுல் படுத்தப்பட்டாலும் பொது மக்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அப்போதே வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

தற்போது தடுப்பூசிகள் எடுத்துவரப்படுகின்றன. அதனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்க முடியும். இந்நிலையில் தமிழ் – சிங்கள புத்தாண்டு தினமும் இடம்பெறவுள்ளது.

பண்டிகை தினத்தை கொண்டாட வேண்டாம் என்று மக்களுக்கு தெரிவிக்க எம்மால் முடியாது. எனினும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் வகையிலேயே கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டும். இதன்போது மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுசுகாதார சேவைகள் பிரிவின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் நிபுணர் லக்ஷ்மி சுமுது தெரிவிக்கையில் ,

இதன்போது பொதுசுகாதார சேவைகள் பிரிவின் மேலதிக செயலாளர் விசேட வைத்தி நிபுணர் லக்ஷ்மி சுமுது கூறுயதாவது , தொற்று நோய்கள் தொடர்பில் எமக்கு ஆரம்பகால அனுபவங்கள் உள்ளது.

எனினும் கொவிட்-19 வைரஸ் பரவலின் முதலாம் அலை முடிவின் போது , மக்கள் அதனை கொண்டாடும் வகையில் விநொத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக இரண்டாவது அலை அதனையும் விட அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த வைரஸ் காற்றின் மூலமே பரவலடைகின்றது என்பது தற்போது அனைவரும் அறிந்ததே. நாம் எமது வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடி வைத்திருக்கும் போது வைரஸ் எம்மை தாக்காது.அதனால் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள்.

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது , குடும்பத்தினருடன் மாத்திரம் இணைந்து கொண்டாடுவது மிகவும் பாதுகாப்பானதாகும். சில நிகழ்வுகளை வழமைப் போன்று கொண்டாட முடியாது.இதன் போது சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

வைரஸ் பரவல் தொடர்பில் நேர்முக மற்றும் மறைமுகமான விடயங்கள் பல உள்ளன. ஆனால் பாதகமான விடயங்கள் மாத்திரமே பேசப்படுகின்றது. 

வைரஸ் தொற்று காரணமாக 500 பேர் வரை உயிரிழந்திருந்தாலும் , 89 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். அது தொடர்பில் பேசப்படுவதில்லை. இந்த சந்தரப்பத்திலும் சில நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் அந்த நிலைமை இல்லை.

வைரஸ் தொற்றை இன்னொருவருக்கு பரப்பக் கூடாது என்பதிலும் ,இன்னுமொருவரிடமிருந்து ரைவஸ் தொற்றை பெற்றுக் கொள்ளக்கூடாது என்பதிலும் நாம் தெளிவான இருக்க வேண்டும்.வைரஸ் பரவலை இல்லாதொழிக்க தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றாலும் , கிடைக்காவிட்டாலும் நாம் உரிய சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடித்தால் வைரஸ் பரவலை வெற்றிக் கொள்ள முடியும்.

தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவிக்கையில் ,

இதன்போது தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர கூறியதாவது , முiறாயன பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. பி.சீ.ஆர். பரிசோதனைகள் நிறுத்தப்படவில்லை.

அவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. புதிதாக வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால் , அவருடன் தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவருமே பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்டுபடுத்தப்படுகின்றார்கள். பி.சீ.ஆர். பரிசோதனைகளை நிறுத்தி வைப்பது என்பது, தற்கொலை செய்வதற்கு சமனானதாகும்.

வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் எழுமாறான பி.சீ.ஆர் பரிசோதனைகளும் அவ்வாறே இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொருளாதார மத்திய நிலையங்களில் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளதனால், அவர்களுக்கான எழுமாறான பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.வைரஸ் பரவல் கட்டுபாட்டுக்குள் வரும் வரையிர் இனந்தெரியாத நபர்களுடடான தொடர்பினை தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.

இந்நிலையில் சீனாவிலிருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 3 இலட்சம் தடுப்பூசிகளை இங்கிருக்கும் சீன நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய கொழும்பு , கண்டி , புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் சீனர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. எஞ்சிய தடுப்பூசிகள் தொடர்பில் நிபுணர் குழு பரிசோதனைகளை செய்து , நாட்டு மக்களுக்கு செலுத்துவதா ? இல்லையா என்பது தொடர்பில் அறிவிக்கும்.  தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றாலும் முறையான சுகாதார விதிகளை கடைப்பிடித்தால் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளமுடியும் என்றார். 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *