பையில் கறை – என்ன செய்யலாம்?

Spread the love

விலங்குத் தோலால் செய்யப்பட்ட உயர்தரப் பைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதனால் அதிக விலைக்கு வாங்கிக்கொள்கிறோம்.

நிறையப் பணம் கொடுத்து வாங்கிய பையைப் பராமரிக்க வேண்டாமா?

அவற்றில் கறை படிந்தால் அதனை எப்படி நீக்குவது?

1. முக ஒப்பனைக் கறைகள்

பையில் வைத்திருந்த உதட்டுச் சாய மூடி கழன்றுவிடக்கூடும். பையின் உட்புறத்தில் உதட்டுச் சாயக் கறைகள் ஏற்படலாம்.

இத்தகைய தருணங்களில் முதலில் கறை பரவாதபடி ஈரமில்லாத துணியால் துடைக்கவேண்டும்.

பின் மெல்லிய ஈரமான துணியைச் சிறிதளவு சலவைப்பொருளில் நனைத்துக் கறையைத் துடைக்க வேண்டும்.

‘Wet wipes’ எனப்படும் தாள்களைப் பயன்படுத்த வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். அவற்றில் உள்ள மது, பையின் தோலைப் பாதிக்கக்கூடும்.

முக ஒப்பனையை நீக்கப் பயன்படுத்தப்படும் ‘make up remover’ பொருள்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கும்படி கூறுகின்றனர் நிபுணர்கள்.

பேனா மையால் ஏற்பட்ட சிறு கறைகளை நீக்க ‘rubbing alcohol’ எனும் மதுத் திரவத்தைப் பயன்படுத்தலாம்.

அதில் சில துளிகளைப் பெரிய கரண்டி தண்ணீரில் கலந்துவிடவேண்டும்.

பின் அதில் துணியை நனைத்து மெதுவாகக் கறையைத் துடைக்க வேண்டும்.

3. ‘ஜீன்ஸ்’ (jeans) துணி உரசி கறை

அழுத்தமான நிறங்கொண்ட ‘ஜீன்ஸ்’ துணிகளை அணிந்தால் அவற்றுடன் உரசும்போது பையில் கறை படியலாம்.

இத்தகைய கறைகளை உடனே நீக்காவிட்டால் அவை நிரந்தரக் கறைகளாகிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். 

விலங்குத் தோலால் ஆன பொருள்களைத் துடைப்பதற்கான leather cleaner பயன்படுத்தித் துடைக்கலாம்.

4. உணவுப் பொருள் கறை

உணவுப் பொருள்களால் ஏற்படும் கறைகளில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது எண்ணெய்க் கறை.

ஈரமில்லாத சுத்தமான துணியால் எண்ணெயை ஒத்தி எடுக்க வேண்டும்; தேய்த்துத் துடைக்கக்கூடாது.

சிலர் குழந்தைகளுக்கான ‘பவுட’ரால் (powder) எண்ணெயை உறிஞ்ச முயற்சி செய்வார்கள். ஆனால் விலங்குத் தோலில் ‘பவுடர்’ படிந்தால் அதை அகற்றுவது கடினம் என்கிறார்கள் நிபுணர்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *