‘பைனாகுலர்’ புக்கி கைது * புனே போட்டியில் பெட்டிங்

Spread the love


புனே: புனே போட்டியின் போது பெட்டிங்கில் ஈடுபட்ட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் புனேயில் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும் புனே மைதானத்தின் அருகில் உள்ள உயரமான கட்டடங்களில் இருந்து ‘பைனாகுலர்’, உயர்தர கேமரா வழியாக பார்த்து, சிலர் பெட்டிங்கில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதற்காக மூன்று சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. 2வது ஒருநாள் போட்டியின் போது ரெய்டில் ஈடுபட்ட போலீசார், மத்திய பிரதேசம் (5 பேர்), ஹரியானா (13), மஹாராஷ்டிரா (11), ராஜஸ்தான் (2) உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 33 புக்கிகளை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ. 45 லட்சம், 74 அலைபேசி, பைனாகுலர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *