பைனலில் சானியா ஜோடி

Spread the love

கிளீவ்லாந்து: கிளீவ்லாந்து ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சானியா, அமெரிக்காவின் கிறிஸ்டினா ஜோடி முன்னேறியது.

அமெரிக்காவில், டபிள்யு.டி.ஏ., கிளீவ்லாந்து ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹேல் ஜோடி, நார்வேயின் உல்ரிக்கே ஜகேரி, அமெரிக்காவின் கேத்தரின் ஹாரிசன் ஜோடியை சந்தித்தது. ‘டை பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 7–6 எனக் கைப்பற்றிய சானியா ஜோடி, 2வது செட்டை 6–2 என மிகச் சுலபமாக தன்வசப்படுத்தியது.

ஒரு மணி நேரம், 23 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சானியா, கிறிஸ்டினா ஜோடி 7–6, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: