பைனலில் இளம் வீராங்கனைகள்: யு.எஸ்., ஓபனில் கலக்கல் | செப்டம்பர் 10, 2021

Spread the love

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலுக்கு இளம் வீராங்கனைகளான கனடாவின் லேலா, பிரிட்டனின் எம்மா முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–2’ பெலாரசின் அரினா சபலென்கா 23, டபிள்யு.டி.ஏ., தரவரிசையில் 73வது இடத்தில் உள்ள கனடாவின் லேலா பெர்ணான்டஸ் 19, மோதினர். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை லேலா 7–6 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட சபலென்கா, 2வது செட்டை 6–4 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அசத்திய லேலா 6–4 என வென்றார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: