பேட்மிண்ட்டன் : பெண்கள் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவரை வீழ்த்திய சிங்கப்பூரர்

Spread the loveImages

  • Yeo

    படம் : AP images

சிங்கப்பூரின் பேட்மிண்ட்டன் விளையாட்டாளரான இயோ ஜியா மின் பெண்கள் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவரை வீழ்த்தியுள்ளார்.

BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்றில் இயோ உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அகானே யமாகுச்சியைச் (Akane Yamaguchi) சந்தித்தார்.

40 நிமிடங்கள் நீடித்த அந்த ஆட்டத்தில் 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ஆட்டத்தை வென்றார் 20 வயது இயோ.

அடுத்த ஆட்டத்தில் இயோ வியட்நாமின் தி ட்ராங் வூ-வைச் சந்திக்கிறார்.

உலகத் தரவரிசையில் இயோ 32ஆவது இடத்தில் உள்ளார்.

BWF உலக சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லந்தில் நடைபெற்றுவருகிறது.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *