பெண்கள் கால்பந்து அணி மீட்பு * ஆப்கானிஸ்தானில் இருந்து…

Spread the love

காபூல்: ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து அணி அந்நாட்டில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து சொந்தமக்களும் வெளியேறி வருகின்றனர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து அணியினர், ‘எங்களை மீட்க வேண்டும்,’ என சர்வதேச நாடுகளிடம் உதவி கேட்டனர். நேற்று ஆஸ்திரேலிய விமானப்படையினர்,  ஆப்கானிஸ்தான் வீராங்கனைகள், பயிற்சியாளர், அவர்களது குடும்பம் உட்பட 75 பேர் கொண்ட குழுவை மீட்டனர். 

இதற்கு நன்றி தெரிவித்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’), ‘இளம் வீராங்கனைகள், குடும்பத்தினரை ஆபத்தில் இருந்து மீட்ட ஆஸ்திரேலிய அரசுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளது. 

காபூலில் இருந்து வெளியேறியது குறித்து பெண்கள் கால்பந்து முன்னாள் கேப்டன் கலிடா போபல் கூறுகையில், ‘சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தோம். ஆனால் இன்று (நேற்று) முக்கியமான வெற்றியை பெற்று விட்டோம். இளம் வீராங்கனைகள் மிக தைரியமானவர்கள். இவர்களுக்கு ஆப்கனுக்கு வெளியே நல்ல எதிர்காலம் உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது ‘ என தெரிவித்தார். 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: