பெங்களூரு கோல் மழை * மும்பை அணியை வீழ்த்தியது

Spread the love


பம்போலிம்: மும்பை அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் பெங்களூரு அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் தற்போது நடக்கிறது. கோவாவின் பம்போலிம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறிய மும்பை அணி, பெங்களூருவை எதிர்கொண்டது.

போட்டியின் முதல் நிமிடத்தில் பெங்களூரு வீரர் கிளைட்டன் முதல் கோல் அடித்தார். மும்பை தொடர்ந்து அசத்திய இவர், 22 வது நிமிடம் இரண்டாவது கோல் அடித்தார். பெங்களூரு அணி முதல் பாதியில் 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் மும்பை வீரர் லீ பாண்ட்ரே, 50வது நிமிடம் முதல் கோல் அடித்தார். அடுத்து 72வது நிமிடம், கடார்டு கொடுத்த பந்தை பெற்ற லீ பாண்ட்ரே, அப்படியே கோலாக மாற்றினார். 

மறுபக்கம் எழுச்சி பெற்ற பெங்களூரு அணி கேப்டன் சுனில் செத்ரி, 57 வது நிமிடம் குர்பிரீத் சிங் சாந்துவிடம் இருந்து பெற்ற பந்தை, கோலாக மாற்றினார். போட்டியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+2வது), சுனில் செத்ரி மற்றொரு கோல் அடித்தார். முடிவில் பெங்களூரு அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 22 புள்ளியுடன் 6வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி (34 புள்ளி) தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. 

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *