பெங்களூரு கோல் மழை * ஆசிய கால்பந்தில் ஆறுதல் வெற்றி

Spread the love


மாலி: ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து தொடரில் பெங்களூரு அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 

ஆசிய கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் ஏ.எப்.சி., கோப்பை 18வது சீசன் நடக்கிறது. இதன் ‘டி’ பிரிவு லீக் போட்டிகள் மாலத்தீவில் நடந்தன. இதில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பெங்களூரு அணி, கடைசி லீக் போட்டியில் மாலத்தீவின் மஜியா அணியை சந்தித்தது. 

போட்டியின் 6வது நிமிடம் உடாண்டா சிங், 19 வது நிமிடம் அகஸ்டோ சில்வா பெங்களூரு அணிக்காக கோல் அடித்தனர். 36 வது நிமிடம் அகஸ்டின் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் பெங்களூரு அணி 3–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் பெங்களுரூ அணிக்காக நாராயணன் (70வது) ஒரு கோல் அடிக்க, பித்யாசாகர் 85, 90+2வது நிமிடங்களில் கோல் அடித்தார்.

மஜியா அணி சார்பில் முகமது (67), அப்துல்லா (82) தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் பெங்களூரு அணி 6–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3 போட்டியில் 1 வெற்றி, 1 ‘டிரா’, 1 தோல்வி என 4 புள்ளி பெற்று 3வது இடம் பிடித்து, வெளியேறியது. முதலிடம் பெற்ற கோல்கட்டா அணி, அரையிறுதி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.  

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: