பூப்பந்து – ஓய்வு பெறுகிறார் மலேசியாவின் லீ சொங் வேய்

Spread the love


Images

  • Lee Chong wei retires

    (படம்: Reuters)

மலேசியாவின் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டாளர் லீ சொங் வேய், விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த 19 ஆண்டுகளாக நேசித்து வந்த விளையாட்டிலிருந்து விலகத் தாம் எடுத்துள்ள முடிவு மிகவும் கடினமான ஒன்று என்றார் அவர்.

மலேசியர்கள் தமக்கு அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சொங் வேய் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டுகளில் மூன்று முறை பதக்கம் வென்றுள்ள அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கண்டறியப்பட்டது.

அவரது உடல்நிலை பற்றியும் பின்னர் தைவானில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றியும் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

உடல்நலக் குறைவால் 2 முக்கியப் போட்டிகளிலிருந்து அவர் விலகிக் கொண்டதாக முன்னதாக வந்த தகவல்கள் கூறின.

2008, 2012, 2016 ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற சொங் வேய் மலேசியாவின் முதல் ஒலிம்பிக் தங்கத்தைப் பெற இலக்குக் கொண்டிருந்தார்.

உலகத் தரவரிசையில் முன்பு முதலிடத்தைப் பெற்றிருந்த அவர் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளத் தாம் பெரிதும் விரும்புவதாகக் கூறியிருந்தார்.

அந்த ஆசை நிறைவேறியிருந்தால் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஐந்து முறை போட்டியிட்ட முதல் மலேசியர் என்ற பெருமை அவருக்குக் கிட்டியிருக்கும்.  

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *