புற்றுநோய் தேங்காய் எண்ணெய் குறித்த மக்களின் சந்தேகத்தை அரசாங்கம் போக்க வேண்டும் – ருவன் விஜேவர்தன 

Spread the love

(எம்.ஆர்.எம்.வசீம்)

எப்லடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

யானை சின்னமே சிறந்தது'': ருவன் விஜேவர்த்தன | Virakesari.lk

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எப்லடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் நாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் அதனை இலங்கை சுங்கம் விடுவித்தும் இருக்கின்றது.

குறித்த தேங்காய் எண்ணெயில் நச்சுப்பொருட்கள் அடங்கியிருப்பது உறுதியான பின்னரும் அதனை விடுத்திருப்பதனால், அவை சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு இடமிருக்கின்றது. அதனால் மக்கள் இன்று பாரிய சந்தேகத்திலேயே தேங்காய் எண்ணெய் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த தேங்காய் எண்ணெயை நாட்டுக்கு கொண்டுவந்த நிறுவனங்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நிலைநாட்டவேண்டும்.

அத்துடன் இதுதொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தி இதன் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும்.  அவ்வாறு இல்லாமல் அரசாங்கம் இந்த விடயத்தை மூடி மறைக்க நடவடிக்கை எடுத்தால் நாட்டுக்குள் பாரிய சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

அத்துடன் தேங்காய் எண்ணெயை கொள்வனவு செய்ய மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த அச்சத்தை போக்க அரசாங்கம் நடவடிக்கடி எடுக்க வேண்டும்.

ஆனால் இதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மக்களுக்கு இருந்துவரும் அச்சத்தை மேலும் திரிபுபடுத்தும் செயலையே அரச தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். 

அத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக அரசாங்கத்தில் இருப்பவர்களே அதுதொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து மக்களை விரக்திக்குள்ளாக்குகின்றனர்.

இறுதியில் குறித்த பிரச்சினை அவ்வாறே மறைக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொடர்பாகவும் சுகாதார பிரிவினர் ஒன்றை தெரிவிக்கும் போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் அதற்கு மாற்றமான கருத்தை தெரிவிக்கின்றனர். அதனால் அரசாங்கம் தெரிவிக்கும் விடயங்களை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.

எனவே  நச்சுத்தன்மை அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இதுதொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொண்டு இந்த வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.  

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *