புத்தாண்டு Vs நிதியாண்டு… காசு, பணம் சேர்க்கத் தேவை மனம்?! புத்தம் புது காலை – 3 #6AMClub | why march is the end of financial year in india?

Spread the love


அதேசமயம் பெரும்பான்மையான அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் ஃபிரான்ஸ், அயர்லாந்து, இந்தோனேசியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஜனவரி 1, புதுவருடத்தன்று தான், நிதியாண்டு துவங்குகிறது. நமது நாட்டிலும், நெஸ்லே இந்தியா, போஷ் ஆகிய தனியார் நிறுவனங்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை என ஏற்கனவே நடைமுறைப்படுத்தியிருக்க, 2018-ம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும்கூட இம்முறை மாற்றியமைக்கப்படும் என அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

நிதியாண்டு எதுவென்றாலும், அதிலுள்ள வரவுசெலவு கணக்கு வழக்குகள், வருமானவரி மற்றும் நிதி அறிக்கைகள்தான், மத்திய மாநில பட்ஜெட் மற்றும் புதிய நிதித்திட்டங்கள் என்ற புதுக்கணக்கை அரசாங்கம் தீட்ட உதவுகின்றன. இவையனைத்தும் வருமானம் கூடுதலாக உள்ள தனியார் துறைகளுக்கும், தொழில் ஸ்தாபனங்களுக்கும், அரசாங்கத்திற்கும் நன்கு பொருந்தும்.

நிதியாண்டு நிறைவு

நிதியாண்டு நிறைவு

ஆனால், தனது ஆசைகளையும், தேவைகளையும், வருமானத்தைக் காட்டிலும் அதிகமாக தேக்கி வைத்திருக்கும் சாதாரண மனிதனுக்கு, இந்தக் காசு, பணம், துட்டு, மணிமணி உள்ளடக்கிய நிதியாண்டு எதைத் தான் எடுத்துரைக்கிறது?!

ஜனவரி 1 புத்தாண்டில் எப்போதும் போல நிறைவேறாத ஆசைகள் அனைத்திற்கும் தீர்மானங்களை (new year resolutions) மேற்கொள்ளலாம். ஆனால், ஏப்ரல் 1 நிதியாண்டு முதல், நமது எல்லைகளைத் தாண்டாமல், நமது தேவைக்கேற்ப, மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்கிற தீர்மானத்தை எடுக்கவேண்டும்.

ஏனெனில்,

“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை”Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *