புதிய வகைக் கொரோனா கிருமிகளைத் துரிதமாக அடையாளம் காணும் Vanguard பரிசோதனை- NTU ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்

Spread the love


நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா கிருமிகளை அடையாளம் காணும் துரிதமான பரிசோதனை முறை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

Vanguard என்று அழைக்கப்படும் அந்தப் பரிசோதனை முறை மூலம் ஆயிரம் வகையான COVID-19 கிருமிகளை 99.5 விழுக்காடு வரை துல்லியமாகக் கண்டறிய முடியும்.

மரபணுவையும் அதன் செயல்பாடுகளையும் மாற்றியமைக்கக்கூடிய CRISPR எனும் கருவியின் உதவியுடன் Vanguard பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

SARS-CoV-2 மரபணுவின் குறிப்பிட்ட பகுதியை அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

அதன் மூலம் குறிப்பிட்ட ஒருவரிடம் கிருமித்தொற்று உள்ளதைத்^ துல்லியமாக அடையாளம் காண முடியும்.

Vanguard பரிசோதனை, Antigen Rapid பரிசோதனையைப் போல 30 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகளைத் தரக்கூடிய ஆற்றல் கொண்டது.

எனினும், Antigen Rapid பரிசோதனையைவிட Vanguard பரிசோதனை பத்து மடங்கு துல்லியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

கர்ப்பச் சோதனையைப் போன்று அட்டை வடிவில் Vanguard பரிசோதனைக் கருவியை வாங்கலாம்.

இதற்கான கட்டணம் 10 வெள்ளிக்கும் குறைவு.

இவ்வாண்டு இறுதிக்குள் சுகாதார அறிவியல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *