Apple நிறுவனம் அதன் புதிய iPhone கைத்தொலைபேசிகளை அறிமுகம் செய்துள்ளது.
மூன்று கேமராக்களைக் கொண்ட iPhone-னும் அதில் அடங்கும்.
IPHONE 11, IPHONE 11 PRO, IPHONE MAX என 3 கைத்தொலைபேசி வகைகளை Apple வெளியிட்டுள்ளது.
இம்முறை வெளியிடப்பட்ட iPhoneகளின் விலையும் சற்றுக் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய ரக iPhone-களின் விவரங்கள் இதோ…
iPhone 11 திரையளவு: 6.1 அங்குலம்.
6 நிறங்களில் விற்கப்படுகின்றன.
அவை மஞ்சள், பச்சை, கறுப்பு, வெள்ளை, ஊதா, சிவப்பு
கைத்தொலைபேசிகளுக்குப் பின்பகுதியிலுள்ள இரட்டைக் கேமரா 12 மெகாபிக்சல்களும், முன் கேமரா 12 மெகாபிக்சல்களும் கொண்டவை.
வெளிச்சம் குறைவாக உள்ளபோது படங்கள் மேலும் தெளிவாகத் தெரிய கேமராக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நீர்புகாமல் தடுக்கும் திறன் 30 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது.
மின்கலன் ஆற்றலை அதிகரிக்க A13 தகடு பெருத்தப்பட்டுள்ளது.
விலை: 1,149 வெள்ளி
விற்பனைக்கு வரும் நாள் : செப்டம்பர் 20
iPhone 11 PRO திரையளவு: 5.8 அங்குலம்.
iPhone 11 MAX திரையளவு: 6.5 அங்குலம்.
திறன்பேசிகள் 4 நிறங்களில் விற்கப்படுகின்றன.
தங்கம், பச்சை, வெள்ளி, சாம்பல்
திறன்பேசிகளுக்குப் பின்பகுதியில் மூன்று கேமராக்கள் உள்ளன.
படங்களை விரிவுபடுத்தித் தெளிவாக எடுப்பது, தொகுப்பது போன்ற புதுத் திறன்களும் உள்ளன.