புதிதாக 7 பேருக்குக் கிருமித்தொற்று – ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பனில் 3 நாள் முடக்கநிலை

Spread the love


ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்திலுள்ள பிரிஸ்பன் நகரில் 3 நாள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நகரில் 7 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதால், முடக்கநிலை அறிவிக்கப்பட்டது.

பல வாரங்களில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் அந்த அளவுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

பிரிட்டனின் புதுரகக் கொரோனா கிருமியால் தொற்று ஏற்பட்டுள்ளதாக, குவீன்ஸ்லந்து முதலமைச்சர் அனஸ்டாசியா பலஸுக் (Annastacia Palaszczuk) கூறினார்.

அந்தக் கிருமி அதிவேகத்தில் பரவக்கூடியது என்பதால், நீண்ட கால முடக்கநிலையைத் தவிர்க்க இப்போதே நகரை முடக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பள்ளிகள், உணவகங்கள், மதுக்கூடங்கள் இன்றிலிருந்து மாலை 5 மணிக்கு மூடப்படும்.

உணவு வாங்குதல், உடற்பயிற்சி செய்தல், மருத்துவப் பராமரிப்புப் பெறுதல், முக்கிய வேலைகளைச் செய்தல் போன்றவற்றுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.

குவீன்ஸ்லந்தில் முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்படுகிறது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: