பிள்ளைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குக் காரணம் Instant noodles?

Spread the love(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

வெந்நீரை ஊற்றி உடனடியாகச் சாப்பிடக்கூடிய உணவு வகை Instant noodles. அது தென்கிழக்காசிய வட்டாரப் பிள்ளைகளை ஊட்டச்சத்துக் குறைபாட்டில் கொண்டுபோய் விட்டிருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

UNICEF எனும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறார் நலன் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி உலகில் 30 விழுக்காட்டு இளம் பிள்ளைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு, உடற்பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் 5 வயதுக்குக்கீழ் இருக்கும் பிள்ளைகளில் 40 விழுக்காட்டினர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

இது சிறார் நலன் அமைப்பு வெளியிட்ட தகவலுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

அதற்கு முக்கியக் காரணம் பிள்ளைகள் அதிகம் சாப்பிடும் Instant noodles வகை என்று கூறப்படுகிறது.

Instant noodles-இல் ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் குறைவு. உப்பும் கொழுப்பும் அதிகம்.

விலை மலிவு என்பதாலேயே பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் வசதி குறைந்தவர்கள் Instant noodlesஐ அதிகம் உட்கொள்வதாகக் கூறப்பட்டது.

உலகளவில் Instant noodles அதிகம் உட்கொள்ளப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியாவிற்கு 2-ஆம் இடம்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *