பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவான Paris Saint-Germainஇல் சேர்ந்துள்ளார் மெஸ்ஸி

Spread the love6 முறை Ballon d’Or விருது பெற்ற நட்சத்திரக் கற்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவான Paris Saint-Germainஇல் சேர்ந்துள்ளார்.

பிரேஸிலின் நேய்மார் (Neymar), பிரான்சின் கைலியன் பாப்பே (Kylian Mbappe) ஆகிய ஏனைய நட்சத்திர ஆட்டக்காரர்களோடு அவர் இணைந்து ஆடவிருக்கிறார்.

எதிர்பாரா விதமாக, பார்சிலோனா (Barcelona) குழுவிலிருந்து மெஸ்ஸி விலகிக்கொண்டார்.

PSG அணியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விவரங்களை, மெஸ்ஸி வெளியிடவில்லை.

ஒவ்வொரு காற்பந்துப் பருவத்துக்கும் அவருக்கு 41 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், அந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

PSG அணி, இதுவரை சாம்பியன்ஸ் லீக் (Champions League) வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியதில்லை.

பார்சிலோனா அணியில் இருந்தபோது மெஸ்ஸி நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் வெற்றிக் கிண்ணத்தையும்; 10 முறை ஸ்பெயினின் லா லிகா (La Liga) போட்டி வெற்றிக் கிண்ணத்தையும் வென்றிருக்கிறார்.  

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: