பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த ஆடையை வடிவமைத்தது யார்?

Spread the love

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, நுணுக்கமான பூத்தையல் வேலைப்பாடுகளுடன் மிளிரும் மஞ்சள் வண்ண ஆடையைத் தமது நிச்சயதார்த்த ஆடையாக சென்ற மாதம் அணிந்து வந்தது சிலருக்கு நினைவிருக்கலாம்.

அந்த ஆடையில் அவர் தமது வருங்காலக் கணவரோடு காணப்படும் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவின.

அனைத்துலக அளவில் புகழ்பெற்றிருந்தபோதும், வாழ்வின் முக்கிய நாளின்போது இந்தியப் பாரம்பரிய ஆடையை விட்டுக்கொடுக்காத பிரியங்காவைப் பலரும் அப்போது பாராட்டினர்.

அந்த அழகிய ஆடையை ஆறு மாதங்களாக அபு ஜனி (Abu Jani), சந்தீப் கோஸ்லா (Sandeep Khosla) இருவரும் இணைந்து வடிவமைத்தனர்.

அதில் உத்தரப் பிரதேசப் பெண்கள் சிறப்பாக உருவாக்கிய சிக்கன்காரி (chikankari) பூத்தையல் வேலைப்பாடுகள் இடம்பெற்றன.

உலகத்தில் பல நகரங்களில் நடைபெறும் முக்கிய ஆடை அலங்கார நிகழ்ச்சிகளில் இவர்களின் ஆடைகள் வலம் வருகின்றன.

அண்மையில், இவர்கள் சிங்கப்பூரில் தங்கள் ஆடைக் காட்சியுடன் கூடிய விற்பனையை நடத்தினர்.

சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆடை அலங்கார அணிவகுப்புக்குப் பின்னர் மக்கள் அதில் இடம்பெற்ற ஆடைகளை வாங்கிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

அவர்கள் வடிவமைக்கும் ஆடைகளுக்கு 1,000 வெள்ளியிலிருந்து 20,000 வெள்ளி வரை கொடுத்து வாடிக்கையாளர்கள் வாங்கிக் குவிக்கின்றனர்.

ஆனால், அவர்களின் ஆடைகள் பெரும்பாலும் திருமணங்களின்போதும் சிவப்புக் கம்பள நிகழ்ச்சிகளின்போதும் அணியப்படுகின்றன.

அமெரிக்கப் பாடகிகளான பியொன்சே (Beyonce), ஜெனிஃபர் லோப்பெஸ் (Jennifer Lopez) போன்றோரும் அவர்களின் ஆடைகளை அணிகின்றனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *