Spread the love
பிரிட்டனில் பிள்ளைகளுக்கான தடுப்பூசித் திட்டம், ஆகஸ்ட் மாதம் தொடங்கக்கூடும்.
திட்டமிட்டதைவிட அது முன்கூட்டியே தொடங்கவிருப்பதாக The Telegraph நாளேடு தெரிவித்தது.
இருப்பினும் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் திட்டம் குறித்து செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளுக்காக அரசாங்க அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
AstraZeneca தடுப்பூசிகளைக் கொண்டு Oxford பல்கலைக்கழகம் நடத்தும் ஆய்வு அது.
ஆய்வின் முடிவுகள் வெளியான பிறகே, பிள்ளைகளுக்கான தடுப்பூசித் திட்டம் எப்போது தொடங்கும் என்று முடிவு செய்யப்படும்.
6 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 300 பேரிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.