பிரிட்டனின் 53 ஆண்டுகள் காத்திருப்பு முடிந்தது: யு.எஸ். ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் எம்மா ராடுகானு: முதல் பிரிட்டன் பெண் | US Open: Emma Raducanu creates history, becomes first British woman to win title in 53 years

Spread the love


பிரிட்டனின் 53 ஆண்டுகள் காத்திருப்பு நேற்றுடன் முடிந்தது. கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 53 ஆண்டுகளுக்குப்பின் பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ராடுகானு சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரி்ட்டனைச் சேர்ந்த ஒரு பெண் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் 53ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக பட்டம் வென்றது இதுதான் முதல்முறையாகும்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 44 ஆண்டுகளில் முதல்முறையாக பிரிட்டனைச் சேர்ந்த ஒருபெண் கிராண்ட்ஸ்லாம்பட்டம் வென்றதும் இதுதான் முதல்முறை. கடைசியாக கடந்த 1977ம் ஆண்டு விர்ஜினா வேட் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றபின் இப்போது எம்மா ராடுகானு வென்றுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் கனடா வீராங்கனை லேலா பெர்னான்டஸை 6-4, 6-3 என்ற செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை எம்மா ராடுகானு வென்றார்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இந்த முறை யுஎஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பெர்னான்டஸ்,ராடுகானு இருவருமே தரநிலையில் இடம் பெறாத வீராங்கனைகள்.

அதாவது சாம்பியன் பட்டம் வென்ற ராடுகானு தரநிலையில் 150-வது இடத்திலும், பெர்னான்டன் 73-வது இடத்திலும் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் யுஎஸ் ஓபன் போட்டிக்கு தகுதிச்சுற்று மூலம் தகுதிபெற்ற எம்மா ராடுகானு பட்டம் வென்றுள்ளார். தகுதிச்சுற்று மூலம் தேர்வாகி, யுஎஸ் ஓபனில் ஒரு பெண் பட்டம் வெல்வது இதுதான் முதல்முறையாகும்.

பதின்பருவத்தில் யு.எஸ்.ஓபனில் தகுதி பெற்ற செரீனா வில்லியம்ஸ் கடந்த 1999ம்ஆண்டு மார்டினா ஹிங்கிஸை தோற்கடித்தார். அதன்பின் பதின்பருவத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் இறுதிப்போட்டிவரை சென்று, பட்டம் வென்றது இதுதான் முதல்முறையாகும்.

எம்மா ராடுகானு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற 10போட்டிகளைச் சந்தித்து வென்றுள்ளார். இதில் 3 ஆட்டங்கள் தகுதிச்சுற்று மூலமும், மற்ற 7 ஆட்டங்கள் பிரதானச்சுற்றிலும் வந்துள்ளன. இதில் எந்த ஆட்டத்திலும் எம்மா ராடுகானு ஒரு செட்டையும் இழக்காமல் வெற்றி கண்டுள்ளார்.

யுஎஸ்ஓபன் நிர்வாகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரி்ட்டனின் 53 ஆண்டு காத்திருப்பு முடிந்தது. எம்மா ராடுகானு முதல்முறையாக பிரிட்டனுக்கு சாம்பியன் பட்டத்தை கடந்த 1968ம் ஆண்டுக்குப்பின் வென்று கொடுத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற எம்மா ராடுகானுவுக்கு பிரி்ட்டன் ராணி எலிசபெத் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் “ எம்மா ராடுகானுவின் கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றிதான் சாம்பியன் பட்டம். என்னுடைய வாழ்த்துகளை எம்மா ராடுகானுவுக்குத் தெரிவிக்கிறேன். இளம் வயதில் மிகச்சிறந்த சாதனையை எம்மா ராடுகானு செ்யதுள்ளார். உங்களின் திறமையி்ல் எனக்கு துளியும் சந்தேகமில்லை. உங்களுடன் மோதிய பெர்னான்டஸ் எதிர்கால தலைமுறையினருக்கு தூண்டுகோலாக இருப்பார்”எ னத் தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ என்ன அற்புதமான ஆட்டம், எம்மா ராடுகானுவுக்கு மிகப்ெபரிய வாழ்த்துகள். திறமை, துணிச்சல், நேர்த்தியை சிறந்தவகையில் வெளிப்படுத்தினீர்கள். உங்களைப் பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” எனப் பாராட்டியுள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: