பிரான்ஸில் இருந்து இறக்குமதியான பதனீடு செய்யப்படாத பாலாடைக் கட்டிகள் மீட்பு

Spread the love


பிரான்ஸின் Graindorge நிறுவனத்தின் பதனீடு செய்யப்படாத
பாலாடைக் கட்டிகள் இங்கிருந்து மீட்டுக்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவித்துள்ளது.

அந்தப் பாலாடைக் கட்டிகளில் ‘E. coli’ எனப்படும் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் அறிவிப்புக்குப் பிறகு சிங்கப்பூரில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாதிப்புக்குள்ளானவை 150 கிராம் பெட்டிகளில் உள்ள Petit Camembert Au Lait Cru பாலாடைக் கட்டிகள் என்றும் அவற்றின் காலாவதித் தேதி மார்ச் 28 என்றும் அமைப்பு குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட பாலாடைக் கட்டிகள்
தற்போது கடைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

யாரேனும் பாதிக்கப்பட்ட பாலாடைக் கட்டிகளைச் சாப்பிட்டு உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரை அணுகுமாறு சிங்கப்பூர் உணவு அமைப்பு கேட்டுக்கொண்டது.  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *