நாவலப்பிட்டியில் உள்ள மின்கடத்தியுடன் தொடர்புடையதாக அமைக்கப்பட்டுள்ள உப மின்பிறப்பாக்கி கடந்த 17 ஆம் திகதி மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் எரிக் லவெட்ரோ ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
மின்கடத்தியின் வலுவை அதிகரித்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு 30 மில்லியன் யூரோ நிதி முதலீட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அபிவிருத்தி செயற்திட்டத்தில் இது முக்கியமானதொரு அடைவாகும்.
இச்செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பிரான்ஸின் நிதிவழங்கல் முகவர் நிலையமான ஏ.எப்.டி கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மின்சார சபைக்கு உதவிகளை வழங்கிவருகின்றது.
அதன்படி இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்ட 30 மில்லியன் யூரோ இலகு கடனுதவி மூலம் மத்திய மாகாணத்தில் 4 உப மின்பிறப்பாக்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயற்திட்டத்தின் மூலம் பாரிஸ் உடன்படிக்கைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.