பாரிஸ் அணிக்கு கோப்பை * மெஸ்சி நம்பிக்கை

Spread the love


பாரிஸ்: ‘‘பாரிஸ்அணிக்காக சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோப்பை வென்று தருவேன்,’’ எனமெஸ்சிதெரிவித்தார்.

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 34.கிளப் அரங்கில்பார்சிலோனா அணிக்காக21 ஆண்டுகள் விளையாடினார்.778 போட்டிகளில், 672 கோல் அடித்தஇவர்,பார்சிலோனா அணிக்காக 35 கோப்பை வென்று தந்தார்.

ஆனால் 50 சதவீதம் சம்பள குறைப்புக்கு ஒப்புக் கொண்ட போதும்,மோசமான நிதிநிலைமை காரணமாக, மெஸ்சியைபார்சிலோனா அணி வெளியேற்றியது. இதனால் மெஸ்சி எந்த அணிக்கு செல்வார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தற்போது பிரான்சின்,பாரிஸ் ஜெயன்ட் ஜெர்மைன் அணியில் இணைந்துள்ளார் மெஸ்சி. இந்த அணியில்பிரேசிலின் நெய்மர், பிரான்சின் எம்பாப்வே, அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா இடம் பெற்றுள்ளனர்.

இங்கு நெய்மரின் (ரூ. 322 கோடி), சம்பளத்தை விட மெஸ்சியின் சம்பளம் (ரூ. 309 கோடி) குறைவாக உள்ளது. அதேநேரம் சம்பளம், போனஸ் உட்பட எல்லாம் சேர்த்து, ஆண்டுக்கு ரூ. 557 கோடி சம்பளம் பெறவுள்ளார் மெஸ்சி. புதிய அணியில் இணைந்ததை அடுத்து மெஸ்சி ‘30’ ம் எண் கொண்ட ‘ஜெர்சி’ அணிந்து விளையாட உள்ளார். 2006ல் பார்சிலோனா ‘சீனியர்’ அணிக்காக களமிறங்கிய போது, இந்த எண் கொண்ட ‘ஜெர்சி’ தான் மெஸ்சி அணிந்தார்.

இதுகுறித்து மெஸ்சி கூறுகையில்,‘‘ சாம்பியன்ஸ் லீக் தொடரில் மீண்டும் கோப்பை வெல்ல வேண்டும் என்பது தான் எனது கனவு. இதை செய்ய பாரிஸ் அணி சரியான இடம் என்று நினைக்கிறேன்,’’ என்றார்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: