பாராலிம்பிக் 2020: 19 பதக்கங்களுடன் வரலாறு காணாத சாதனை படைத்திருக்கும் இந்தியா! | India ended its Paralympic campaign with Historic Wins

Spread the love


பேட்மிண்டனில் மட்டும் 2 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக 4 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.

தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் தருண் தோல்வியை தழுவியிருந்தார். பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி இணை ஆடிய வெண்கல பதக்கத்திற்கான போட்டியிலும் தோல்வியே ஏற்பட்டிருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் போராடிய விதம் ஊக்கம் அளிக்கக்கூடியதாக இருந்தது. 21-23, 19-21 என நெருங்கி வந்தே தோல்வியை தழுவியிருந்தனர். டேபிள் டென்னிஸில் பவினா படேலின் போராட்டத்தோடு தொடங்கிய இந்தியா பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலியின் போராட்டத்தோடு டோக்கியோ பாராலிம்பிக்கை முடித்திருக்கிறது.

பிரமோத் பகத்

பிரமோத் பகத்
Twitter/PramodBhagat

இந்த டோக்கியோ பாராலிம்பிக் இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்கதாகவே அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்/பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை வென்றிராத அளவுக்கு பதக்கங்களை வென்றிருக்கிறது.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: