பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற சுமித் அன்ட்டில்… ஒரே போட்டியில் ஹாட்ரிக் உலக சாதனைகள்! |indias Sumil Antil breaks world record in Paralympics

Spread the love


F64 ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் சுமித் அன்ட்டிலும் சந்தீப் சௌத்ரியும் பங்கேற்றிருந்தனர். ஒருவருக்கு 6 வாய்ப்புகள் வழங்கப்படும். சுமித் அன்ட்டில் முதல் வாய்ப்பிலேயே பிரமாதப்படுத்திவிட்டார். 66.95 மீட்டருக்கு வீசி உலக சாதனைப் படைத்தார். அப்போதே ஏறக்குறைய தங்கம் உறுதியாகிவிட்டது. இரண்டாவது வாய்ப்புக்கு ஈட்டியை ஏந்தினார். முதல் வாய்ப்பை விட மிகச்சிறப்பாக இதில் 68.08 மீட்டருக்கு வீசினார். இன்னொரு உலக சாதனை.

முதல் இரண்டு வாய்ப்புகளிலும் இரண்டு புதிய உலக சாதனைகளைப் படைத்தார். பாராலிம்பிக்ஸில் எப்போதாவதே நடக்கும் அரிய நிகழ்வு இது. ஆனால், இத்தோடு நின்று விடவில்லை. ஐந்தாவது வாய்ப்பில் 68.55 மீட்டருக்கு வீசி மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார். மொத்தமாக 6 வாய்ப்புகளில் மூன்று உலக சாதனைகள். இப்படிப்பட்ட ஒருவர் தங்கம் வெல்லாவிட்டால்தான் ஆச்சர்யம். இந்தியாவை தாண்டி உலகமே இப்போது அவரை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

சுமித் அன்ட்டில்

சுமித் அன்ட்டில்
Joel Marklund for OIS

ஒரே நாளில் பாராலிம்பிக்ஸ் அரங்கில் இந்தியாவின் தேசிய கீதம் இரண்டாவது முறையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா இதுவரை அடைந்திடாத பெருமைகளை பாராலிம்பிக்ஸ் வீரர்/வீராங்கனைகள் அடைய வைத்திருக்கின்றனர். ஈட்டி எறிதலில் இன்றைய நாளில் மட்டும் மூன்று பதக்கங்கள். சில நாட்களுக்கு முன்புதான் நீரஜ் சோப்ரா வேறு தங்கம் வென்றிருந்தார். ஈட்டியை ஒரு தேசிய சின்னமாக அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: