பாராலிம்பிக்கில் இந்திய கொடியேந்தும் `தங்க’ மாரி… டோக்கியோவில் வேற மாறி சம்பவம் லோடிங்! | Mariyappan Thangavelu – A Flag Bearer and a Medal contender for India at Tokyo Paralympics

Spread the love


பொருளாதார ஸ்திரத்தன்மை, கட்டுக்கோப்பான உடல்வாகு, செதுக்கி செதுக்கி மெருகேற்றும் உயர்தர பயிற்சியாளர்கள் இவை அத்தனையுமே கிடைக்கப்பெற்ற பல இந்திய வீரர்/வீராங்கனைகளே உலக அரங்கில் சரியாக பர்ஃபார்ம் செய்ய முடியாமல் தடுமாறி கொண்டிருக்கின்றனர். ஆனால், இவற்றில் எதுவுமே முறையாக வாய்க்கப்பெறாத மாரியப்பன் தங்கவேலு இன்றைக்கு நம் தேசத்தின் பெருமையாக உயர்ந்து நிற்கிறார். பாராலிம்பிக்கில் இந்தியாவின் தேசியக்கொடியை ஏந்தி வீரர் வீராங்கனைகளை வழிநடத்தி செல்லவிருக்கிறார் மாரியப்பன்.

2016 ரியோ ஒலிம்பிக்ஸ் இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. லண்டன் ஒலிம்பிக்ஸில் 6 பதக்கங்களை வென்றிந்த இந்தியா ரியோ ஒலிம்பிக்ஸில் எப்படியும் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும் என பயங்கர எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால், வென்றது என்னவோ இரண்டே இரண்டு பதக்கங்கள். ஒட்டுமொத்த இந்தியாவுமே பயங்கர அப்செட். வழக்கம்போல 130 கோடி இந்தியர்களுக்கு வெறும் இரண்டே இரண்டு பதக்கம்தானா என விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருந்தது. இந்தக் களேபரங்களுக்கு நடுவே பாராலிம்பிக்ஸ் என்ற ஒன்று நடைபெறுகிறது என்பதையே பலரும் மறந்திருந்தனர். ஒலிம்பிக்ஸ் அவ்வளவுதான்… இந்தியா தோற்றுவிட்டது… இந்திய வீரர்கள் ஏமாற்றிவிட்டனர் என எங்கு காணினும் புலம்பல் சத்தங்கள்.

மாரியப்பன்

மாரியப்பன்

ஒலிம்பிக்ஸ் கொடுத்த வலி… ஏமாற்றம்… ஏக்கம் அத்தனைக்கும் தீர்வாக அமைந்தது அந்த பாராலிம்பிக்ஸ். 19 வீரர்/வீராங்கனைகளை மட்டுமே அனுப்பியிருந்த இந்தியா நான்கு பதக்கங்களை வென்றது. மாரியப்பன் தங்கவேலு வென்ற தங்கப்பதக்கமும் அதில் அடக்கம். அதிகாலையில் நடைபெற்ற மாரியப்பனின் நீளம் தாண்டும் போட்டியை காண ஒட்டுமொத்த கிராமமும் குழுமியிருந்தது. 1.89 மீட்டருக்கு மாரியப்பன் தாவி குதித்தபோது ஒட்டுமொத்த கிராமமுமே மாரியப்பனுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரிப்பில் துள்ளிக்குதித்தது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: