Spread the love
பாண்டான் நீர்த்தேக்கம் அருகே உள்ள பெஞ்சுரு ரோட்டில் (Penjuru Road) நேற்று (மார்ச் 31) நடந்த சாலை விபத்தில் 48 வயதுப் பெண் பாதசாரி மாண்டார்.
சம்பவம் தொடர்பில் 68 வயது ஓட்டுநரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
ஜூரோங்கில் ஜாலான் அகமது இப்ராஹீமை (Jalan Ahmad Ibrahim in Jurong) நோக்கிச் செல்லும் சாலையில் இழுவண்டியும் (trailer) பாதசாரி ஒருவரும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து நேற்று மதியம் சுமார் 4.10 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
அந்தப் பாதசாரி இறந்துவிட்டதாகச் சம்பவ இடத்திலேயே அறிவிக்கப்பட்டது.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணம் விளைவித்த சந்தேகத்தின்பேரில் அந்த 68 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.