பாக்., பயிற்சியாளர் ஹைடன்

Spread the love

லாகூர்: பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஹைடன் 49, பிளாண்டர் 36, நியமிக்கப்பட்டுள்ளனர். 

உலககோப்பை ‘டுவென்டி – 20′ தொடர் அக். 17 – நவ. 14 வரை நடக்கிறது. இதற்கான  பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் துவக்க வீரர் ஹைடன், தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் பிளாண்டர் நியமிக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் போர்டின்  புதிய தலைவர் ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

 இவர் கூறுகையில், ‘‘பாக்., அணிக்கு புதிய பாதை தேவை என கருதுகிறேன். இதற்கு ஏற்ற வகையில் புதிய பயிற்சியாளர்கள் தேவைப்படுகின்றனர். உலக கோப்பை வென்ற அனுபவம் ஹைடனுக்கு உண்டு. இது பாகிஸ்தானுக்கு பயன் அளிக்கும். பவுலிங் நுணுக்கம் அறிந்தவர் பிலாண்டர். தலைமை பயிற்சியாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும்,’’என்றார். 

ஏற்கனவே பாக்.,பயிற்சியாளர்களாக இருந்த மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் சமீபத்தில் விலகினர். 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: