பாக்., அணி அறிவிப்பு: சர்பராஸ் அகமது நீக்கம்

Spread the love

கராச்சி: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் அகமது, பகார் ஜமானுக்கு இடமில்லை.

பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் (செப். 25 – அக். 14, இடம்: லாகூர், ராவல்பிண்டி) நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிராக 7 ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின், ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் பங்கேற்கிறது. இம்மூன்று தொடர்களுக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.

 

பாபர் ஆசம் தலைமையிலான இந்த அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர், நான்கு ‘ஆல்–ரவுண்டர்’, நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்து, விண்டீசுக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்ற சர்பராஸ் கான், பகார் ஜமான், பஹீம் அஷ்ரப், ஷர்ஜீல் கான், உஸ்மான் காதிர், அர்ஷாத் இக்பால் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. மிடில்–ஆர்டர் பேட்ஸ்மேன் ஆசிப் அலி, குஷ்தில் ஷா தேர்வாகினர்.

பகார் ஜமான், உஸ்மான் காதிர், ஷாநவாஸ் தஹானி மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

பாக்., அணி: பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஆசம் கான், ஹாரிஸ் ராப், ஹசன் அலி, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹாஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், ஷஹீன் ஷா அப்ரிதி, சோகிப் மக்சோத்.

 

பயிற்சியாளர்கள் விலகல்

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக், பவுலிங் பயிற்சியாளராக வக்கார் யூனிஸ், 2019ல் நியமிக்கப்பட்டனர். இவர்களது பதவி காலம் முடிய இன்னும் ஓராண்டு உள்ளது. இந்நிலையில் இவர்கள் இப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர். இதனையடுத்து சொந்த மண்ணில் நடக்கவுள்ள நியூசிலாந்து தொடருக்கு முன்னாள் வீரர்களான சக்லைன் முஷ்தாக், அப்துல் ரசாக் இடைக்கால பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் புதிய தலைவராக முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரமீஸ் ராஜா, வரும் செப். 13ல் பொறுப்பேற்க உள்ள நிலையில் இவர்கள் விலகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மிஸ்பா கூறுகையில், ‘‘எனது குடும்பத்தினருடன் நீண்ட நேரம் செலவிட விரும்புவதால், இப்பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்,’’ என்றார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: