பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு கொரோனா உறுதி | Pakistan president Dr Arif Alvi tested corona positive | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


Pakistan-president-Dr-Arif-Alvi-tested-corona-positive

முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அதிபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆல்வியும் அவரது மனைவி சாமினா ஆல்வியும் சீன தயாரிப்பான சினோஃபார்ம் என்ற கொரோனா தடுப்பூசியை இருதினங்களுக்கு முன்பு எடுத்துள்ளனர்.

இதுபற்றி ஆல்வி, ‘’எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளேன். ஆனால் இரண்டாவது டோஸ் எடுத்தபிறகுதான் ஆன்டிபாடிகள் உடலில் அதிகரிக்கத் தொடங்கும். எனவே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’’ என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *