பவினா படேல்… பாராலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்று நம்பிக்கையை விதைத்திருக்கும் போராளி! |Bhavina Patel won silver medal in tokyo 2020 Paralympics

Spread the love


பவினா படேல்

பவினா படேல்
Twitter

இந்த போட்டி அவ்வளவு எளிதாகவெல்லாம் அமைந்துவிடவில்லை. இரண்டு வீராங்கனைகளும் முட்டி மோதினர். மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். சராசரியாக ஆறேழு நிமிடத்தில் முடியும் போட்டிகள் 10 நிமிடத்துக்கு மேல் நீடித்தது. நிறைய லாங் ரேலிக்கள் சென்றது. அந்த போட்டியில் 17-15 என பவினா வென்ற அந்த மூன்றாவது கேமே போதும்… அது எவ்வளவு கடினமான போட்டியாக இருந்ததென்பதை உணர!

பவினா அத்தனை சவால்களையும் கடந்து அந்த போட்டியை வென்றார். அதன்மூலம், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறினார். அங்கே இதற்கு மேல் ஒரு கடுமையான போட்டி இருந்தது. பிரேசில் வீராங்கனைக்கு எதிரான அந்த போட்டியை 3-0 என வென்றார் பவினா. மேலோட்டமாக பார்ப்பதற்கு எளிமையாக வென்றதை போல் தோன்றும். ஆனால், இந்த போட்டி ஒரு போர்க்களம் போல இருந்தது. மூன்றில் இரண்டு கேம்களில் இரண்டு பேருக்கும் இடைப்பட்ட புள்ளி வித்தியாசம் இரண்டு மட்டுமே. நேருக்கு நேர் சரிசமமாக சமர் செய்திருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் செர்பிய வீராங்கனை பெரிக் ரேங்கோவிக்கை எதிர்கொண்டார். இவர் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர். இந்த போட்டி இன்னும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பவினா இந்த போட்டியைத்தான் மிக எளிமையாக வென்றார். முதல் 3 கேம்களையும் பெரிதாக எந்த சிரமுமின்றி வென்றுவிட்டார்.

அரையிறுதியில் பவினா சீன வீராங்கனை ஷாங் மியாக்கு எதிராக மோதவிருக்கிறார் என அறிவிப்பு வந்தது. இது உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில், முதல் போட்டியிலேயே ஒரு சீன வீராங்கனைக்கு எதிராக பவினா தோற்றிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு சீன வீராங்கனை. அதுவும் அரையிறுதியில். பவினா வாழ்நாளில் இதுவரை சந்தித்திடாத சவால் இது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: