பழைய மின்சாரச் சாதனங்களைப் பழுதுபார்த்துப் பயன்படுத்துவீர்களா?

Spread the love



(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

நம்மில் எத்தனை பேர் பழைய மின்சாரச் சாதனங்களைப் பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்துகிறோம்?

மறுபயனீடு, மறுசுழற்சி, குறைவாகப் பயன்படுத்துதல் ஆகியவைகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ‘Repair’ என்னும் குறும்படத்தைச் சுற்றுப்புற, நீர்வள அமைச்சு வெளியிட்டுள்ளது.

அந்தக் குறும்படத்தில் ஒரு தாத்தாவும் பேரனும் சேர்ந்து, உடைந்த பழைய வீடியோ கேமராவைப் பழுதுபார்க்கிறார்கள்.

அது சரிசெய்யப்பட்டதும் இருவரும் பழைய தேசியதின அணிவகுப்பின் காட்சிகளை அதில் சேர்ந்து பார்த்து ரசிக்கிறார்கள்.

‘Year Towards Zero Waste’ இயக்கத்தின் ஓர் அங்கமாக மூன்று குறும்படங்கள் வெளியிடப்படவுள்ளன. அந்த வரிசையில் ஒன்று ‘Repair.’

 மற்ற இரண்டு குறும்படங்கள் அடுத்த மாதமும் அக்டோபர் மாதமும் வெளியிடப்படும்.

மின்சாரக்கழிவு, உணவுக்கழிவு, பொட்டலக்கழிவு ஆகிய மூன்று அம்சங்களை மையமாக வைத்து ஒவ்வொரு குறும்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது.





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *