பளீள் ஹாஜியாரின் வாழ்வும் பணிகளும்….

Spread the love

கியாஸ் ஸலாம்


அல் ஹாஜ் ,தேச மாணீ, தேச கீர்த்தீ ஏ .எம் பளீள் ஹாஜியார்ஸ்ரீலங்காவின் ,இரத்தினபுரி மாவட்டத்தின் எழில் மிகு மலைகளுக்கு மத்தியில் அமைத்திருக்கும் அழகான, ரம்யமிகு நகரமான பலாங்கொடையை பிறப்பிடமாக கொண்ட இவர் மர்ஹூம் அபூசாலி அவர்களது மகனும் மர்ஹூம் சல்மா பீபீ ஆகியோரின் அன்பு புதல்வருமாவார்.

இன்று உலகம் கல்விக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பது என்பது எல்லோரும் அறிந்த உன்மை ஆனால் பளீள் ஹாஜியார் என்ற தனி மனிதர் கல்விக்கு மூன்று தசாப்தத்துக்கு முன்பே பாரிய பங்களிப்பு செய்துள்ளார் .பல மாணவர்களுக்கு பல்கலைகழகம் (university) பூர்த்தியாகும் வரை முழு கொடுப்பனவுகளைம் செலுத்தி பல நளீமியர்களையும் பல உலமாக்கல்களை
உருவாக்கியதில் பாரிய பங்களிப்புக்களையும் செய்தவர்.

1986ஆண்டு பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபை தலைவராக கடமை பொருப்பை மேற்கொண்டு பாரிய சேவையை எமது சமூகத்துக்கு வழங்கியமை யாரும் மறக்க முடியாத சிறப்பம்சமாகும் .

அக் காலப் பகுதியில் தான் பளீள் ஹாஜியார் நலன் புரிச் சங்கம் ஒன்றை ஆரம்பித்து பின்வரும் விடயங்களை மேற் கொண்டு வந்தார்.

‘கல்விக்கு உயிரூட்டுபவன் என்றும் மரணிப்பதில்லை”

பலர் பாடசாலைகளை உருவாக்கி மாணவர்களுக்கு இனாமாக கல்விகாட்பதற்கு வழிவகைகளை ஏட்படுத்திக்கொடுத்தார்

பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசுகள் இந்த சங்கத்தின் ஊடாக வழங்கியமை.

ஒவ்வொரு வருடமும் மீழாத் விழா மிக சிறப்பாக பொறுமதியான பரிசுகள், தென் இந்தியாவில் இருந்து பிரத்தியகமான உலமாக்களை விசேஷடமாக அழைத்து வந்து எமது சமூகத்துக்கு பயன் தரக்கூடிய உபஞானசம் வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயம்.

தற்போதய ஜெயிளானி பாடசாலைக்கு முதற் தடவையாக மர்ஹூம் ரஷீத் ir,பாரூக் அலி ஹாஜியார் போன்றவர்களின் முயற்சியின் பயனாக எமது பாடசாலை பெண் பிள்ளைகளுக்கு பர்தா முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டு பளீள் ஹாஜியாரின் சொந்த செலவில் முழு பிள்ளைகளுக்கும் வினியோகிக்கப்பட்டது என்பது வரலாற்றுச் சம்பவம்.

ரமழான் என்றால் எமக்கு அமல் செய்யும் மாதமாகவே கருதுகிறோம், ஆனால் அன்று ஹாபீல்கள் எமது ஊரில் யாருமே இல்லாத சந்தர்ப்பத்தில் இலங்கையில் தலைசிறந்த ஹாபீல்களில் ஒருவராகியஅஷ் ஷேஹ் அலியார் ஆபீல் அவர்களை அழைத்து முழு ரமழானிலும் முழு குர்ஆனையும் கேற்கும் பாக்கியத்தையும் செய்து தந்த மாமனிதர் பளீள் ஹாஜியார்.

இலங்கையில் கூட்டு சகாத் நடைமுறையில் உள்ள ஊர்களில் எமது பாலாங்கொடை ஊர் மிக முக்கி இடத்தை வகிக்கிறது. இன்று பலாஙகொடையில நடைமுறை படுத்தப்பட்டு வரும் கூட்டு சகாத் இதற்கு ஆரம்பத்தில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பே அத்திவாரம் இட்டவர்தான் இந்த பளீள் ஹாஜியார் என்றால் அது மிகையாகாது.

அன்று அவர் ரம்லான் மாதம் வந்ததும் ஓபனாயக்க தொடக்கம் – தஞ்சன் தென்னை வரை உள்ள ஒவ்வோரு முஸ்லிம் முடும்பத்துக்கும் 20k அரிசியும் 500ரூபாய் பணமும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு வீடாக சென்று தனது சக்காத் சதகா பணத்தால் உதவி பலாங்கொடை இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஏனைய தனவந்தர்களையும் தமது செல்வங்களை தேவை உடையவர்களுக்கு வழங்குவதற்கு ஒரு உந்து சக்கியாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.

அனாதை பெண்களுக்கு இலவசமாக தைய்யல் மெஷின், விதவைகளுக்கு மாதாந்த கொடுப்பனவு,
விதவைகள்,நோயாளர்கள் ஆகியோருக்கு பலாங்கொட பிரதான வைத்தியசாலை DMO அவர்களை வைத்து இலவச மருத்துவம் வழங்கப்பட்டது.

பளீள் ஹாஜியார் அவர்களால் நாடளாவிய ரீதியில் கட்டிக்கொடுக்கப்பட்ட பள்ளிகள் பின்வருமாறு
திகதுர மஸ்ஜிதுல் பfலா


தென்னை மஸ்ஜித்
பளீள் ஹாஜயார் மாவத்தை மஸ்ஜிதுல் ஹூதா
பலாங்கொடை டவுன் பள்ளி மேல் மாடி
1987ஆண்டு கெங்கல்ல பள்ளி நிர்மாணம்
அலுகல்ல பள்ளி நிர்மாணம்
1986ஆண்டு ஹட்டன் பள்ளி கீழ் மாடி புணர்நிரமானம்


1986 ஆண்டு தல்துவ புனர்நிர்மானம்
1986 ஆண்டு குருவிட்ட புஸல்லா பள்ளி புணர்நிரமாணம்
உடுகொட மத்ரஷா காணி வழங்கியமை.

மர்ஹூம் மொஹமட் பஹ்ஜி அவர்களது வேண்டுதலுக்கு இனங்க✓ மர்ஹூம் Al haj அஜ்வத் (அமீர் ஷாப் ) மர்ஹூம் Al haj Nizam(Former Register) மர்ஹூம் Al haj Abdul Salam (former Base imam)
Al Haj m.z Razik இவர்களது பரிந்துரைக்கு முக்கியத்துவம் கொடுத்து அட்டாளசேனை மத்ரசாவுக்கு
10 ஏக்கர் நிலம் அன்பளிப்பு செய்யப்பட்டது

பளீள் ஹாஜியார் (கொலனி)
மாவத்தையில பல வீடுகள் கட்டிக்கொடுத்தமை பாதை விஸ்தரிக்கப்பட்டு,கிணறு கட்டி தண்ணீர் வசதி ஏற்பாடுகளும் செய்தமை இந்த நல்ல மனிதருக்கே ஈருலக வாழ்க்கையிலும் கிடைக்கும் நற்பாக்கியம்.

பல நூற்றுக்கணக்கான ஏழை குமரி பெண்களுக்கு உதவுக்கரம் நீட்டிய கொடை வள்ளல் இது போன்று இன்னொர்அன்ன எனக்கு கிடைக்கப்பெறாத இன்னும் ஏராளமான நற் காரியங்கள் இருக்ககூடும்.

ஆகவே இவர்களது காலத்தில் அவருக்குற்பட்ட பல நற் காரியங்களை மேற் கொண்டுள்ளார் இவரது அனைத்து நற்காரியங்களையும் பொருந்திக்கொள்வனாக நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கித்தையும் வழங்குவானாக, இது போன்ற நல் உள்ளம் படைத்த கொடைவள்ளல்கள் எமது பலாங்கொடைக்கு கிடைத்த இறைவனின் அருள் என்றே கூறவேண்டும் .

𝐊𝐢𝐲𝐚𝐬 𝐬𝐚𝐥𝐚𝐦.
இரத்தினபுரி மாவட்ட ஜக்கிய மக்கள் சக்தி ஒருங்கினைப்பாளர்.

தற்போதய ஜெயிளானி பாடசாலைக்கு முதற் தடவையாக மர்ஹூம் ரஷீத் ir,பாரூக் அலி ஹாஜியார் போன்றவர்களின் முயற்சியின் பயனாக எமது பாடசாலை பெண் பிள்ளைகளுக்கு பர்தா முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டு பளீள் ஹாஜியாரின் சொந்த செலவில் முழு பிள்ளைகளுக்கும் வினியோகிக்கப்பட்டது என்பது வரலாற்றுச் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: