பருவநிலை மாற்றம், நிதித் துறைக்கு இடரை ஏற்படுத்தும் அதே வேளையில் வாய்ப்பையும் வழங்குகிறது: சிங்கப்பூர் நாணய வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன்

Spread the love


Images

  • singapore skyline night

பருவநிலை மாற்றம், நிதித் துறைக்கு இடரை ஏற்படுத்தும் அதே வேளையில், வாய்ப்பையும் வழங்குவதாக சிங்கப்பூர் நாணய வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் கூறியிருக்கிறார்.

பருவநிலை மாற்றமும் நீடித்த நிலைத்தன்மையும், நிறுவனங்களும் நிதித்துறையும் முக்கிய கவனம் செலுத்தும் அம்சங்களாக இருக்கும் என்றார் அவர்.

CNA-இன் The Climate Conversations podcast ஒளிப்பதிவில் அவர் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூர் எவ்வாறு பசுமையான ஒரு பொருளியலுக்குள் அடியெடுத்து வைக்கலாம் என்பது பற்றியும் திரு ரவி மேனன் பேசினார்.

பருவநிலை மாற்றம், நிதித் துறைக்கு எத்தகைய இடராக விளங்குகிறது, அதை எப்படிச் சமாளிப்பது, குறைந்த கரியமிலவாயுவைப் பயன்படுத்தும் பொருளியலாக எவ்வாறு உருமாறுவது என்பது குறித்து, அனைத்துலக நிதி நிலையமான சிங்கப்பூர் ஆழமாக ஆராய வேண்டியிருந்ததாக அவர் சொன்னார்.

அவை அனைத்தும், பொருளியல்கள், சமூகங்கள் ஆகியவற்றின் அமைப்புகளை மாற்றவிருந்ததாகவும் அவர் கூறினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *