பதவி விலகுகிறாரா கேப்டன் கோஹ்லி * உலக கோப்பை தொடருக்குப் பின்…

Spread the love

புதுடில்லி: கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகப் போவதாக வந்த செய்தியை பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் மூன்று வித அணிக்கும் கேப்டன் கோஹ்லி 32. இவர் 65 டெஸ்ட் (38 வெற்றி), 95 ஒருநாள் (65 வெற்றி), 45 ‘டுவென்டி–20’ (27 வெற்றி) போட்டிகளில் கேப்டனாக களமிறங்கியுள்ளார். கடந்த 2019 க்குப் பின் சர்வதேச அரங்கில் பேட்டிங்கில் தடுமாறி வரும் இவர், இன்னும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

இதனிடையே, ‘வரும் அக். 17ல் எமிரேட்சில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்குப் பின், பணிச்சுமையை குறைக்கும் வகையில் கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகுகிறார். டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக இருந்து, பேட்டிங்கில் முழு கவனம் செலுத்தப் போகிறார். இவருக்குப் பதில் ஒருநாள், ‘டுவென்டி–20’ அணி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) கோஹ்லி பேசிவிட்டார்,’ என செய்தி வெளியானது. 

இது குறித்து பி.சி.சி.ஐ., பொருளாளர் அருண் துமால் கூறியது:

கோஹ்லி பற்றி வெளியான செய்திகள் அனைத்தும் முட்டாள்தனமானவை. இதெல்லாம் ஒருபோதும் நடக்கப்போவதில்லை. இப்படி ‘மீடியாவில்’ மட்டும் தான் பேசப்பட்டு வருகிறது. டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி–20’ என மூன்று வித அணிக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிப்பது குறித்து பி.சி.சி.ஐ., சார்பில் ஒருபோதும் விவாதிக்கப்பட்டது இல்லை. இந்த பிரச்னை தொடர்பாக எவ்வித கூட்டமும் நடக்கவில்லை. மூன்று வித அணிக்கும் கோஹ்லி தான் கேப்டனாக நீடிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

துரதிருஷ்வசமானது

ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணி கேப்டனாக உள்ள கோஹ்லி கூறுகையில்,‘‘கொரோனா காரணமாக எதுவும் உறுதியில்லாமல் உள்ளது. 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது. மீதமுள்ள போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம்,’’ என்றார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: