நோய்த்தொற்று, பாலின சமத்துவத்தை ஒரு தலைமுறை தாமதப்படுத்துகிறது: உலகப் பொருளியல் கருத்தரங்கு

Spread the love


ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் பல ஆண்டுகள் கண்ட முன்னேற்றங்களை நோய்த்தொற்று பாதித்துள்ளதாக உலகப் பெருளியல் கருத்தரங்கின் (World Economic Forum, WEF) அறிக்கை தெரிவித்துள்ளது.

அதனால் பாலின இடைவெளியைக் குறைப்பதற்கு இன்னும் அதிகமான ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆண்களை விடப் பெண்கள் அதிக விகிதத்தில் வேலைகளை இழந்துள்ளனர். பள்ளிகள் மூடப்பட்ட போது, பெண்கள் கூடுதல் குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருந்ததாகப் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

அதன் விளைவுகள் நீண்டகாலத்திற்கு உணரப்படும் என்று WEF கூறுகிறது.

WEF-இன் வருடாந்திர உலகளாவியப் பாலின இடைவெளி அறிக்கையில், பாலின சமத்துவத்தை அடையும் இலக்கு மேலும் தள்ளிச் செல்வதாகக் கூறப்பட்டது.

பாலின இடைவெளியைச் சரிசெய்ய இன்னும் 135.6 ஆண்டுகள் எடுக்கும் என்று இவ்வாண்டு அறிக்கையில் கூறப்பட்டது.

டிசம்பர் 2019 அறிக்கையில், அதற்கு 99.5 ஆண்டுகள் எடுக்கும் என்று கூறப்பட்டது.

“மற்றொரு தலைமுறைப் பெண்கள் பாலின சமத்துவத்திற்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று WEF அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *