நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

Spread the love


நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 139 கொவிட் தொற்றாளர்களுள் அதிகமானவர்கள் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 39 ஆகும்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்திலிருந்து 22 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 20 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 14 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 7 பேரும், மாத்தளை மாவட்டத்திலிருந்து 4 பேரும், காலி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்து தலா 3 பேர் வீதமும் நேற்றையதினம் கொவிட் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

மேலும், கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து தலா 2 தொற்றாளர்கள் வீதமும், மாத்தறை, புத்தளம், முல்லைத்தீவு திருகோணமலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தலா ஒரு தொற்றாளர் வீதமும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய 14 பேரும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர்.





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *