நெய்மர் அணியில் மெஸ்சி

Spread the love


பாரிஸ்: பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய மெஸ்சி, நெய்மர் இடம் பெற்றுள்ள பாரிஸ் ஜெயன்ட் ஜெர்மைன் அணிக்கு செல்ல உள்ளார். 

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 34. தனது 13வது வயதில் (2000) பார்சிலோனா யூத் அணிக்காக களமிறங்கினார். கடந்த 2004 முதல் சீனியர் அணிக்காக பங்கேற்றார். 778 போட்டிகளில், 672 கோல் அடித்துள்ளார். கிளப் அரங்கில் ஒரு அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என சாதனை படைத்தார். தவிர பார்சிலோனா அணிக்காக 35 கோப்பை வென்று தந்தார். 

இதனிடையே கொரோனா காரணமாக நிதிநிலைமை கடுமையாக பாதிக்கப்பட, பார்சிலோனா அணியை காப்பாற்ற மெஸ்சியை வெளியேற்ற நிர்வாகம் முன்வந்தது. முந்தைய சம்பளத்தில் பாதி கொடுத்தால் கூட போதும் என மெஸ்சி முன்வந்த போதும், ஒப்பந்தம் செய்யத் தயாராக இல்லை. வேறு வழியில்லாத நிலையில் பார்சிலோனா அணியில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார். 

பார்சிலோனா அணியுடன் 21 ஆண்டு கால மெஸ்சியின் பயணம் முடிவுக்கு வந்ததை அடுத்து, இவரை ஒப்பந்தம் செய்ய பிரான்சின் பாரிஸ் ஜெயன்ட் ஜெர்மைன் அணி முன்வந்துள்ளதாக தெரிகிறது. இந்த அணியில் ஏற்கனவே பிரேசில் அணி கேப்டன் நெய்மர், பிரான்சின் எம்பாப்வே, அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா உள்ளனர். மெஸ்சியும் இணையும் பட்சத்தில் முன்களத்தில் ‘மெஸ்சி–நெய்மர்–எம்பாப்வே–ஏஞ்சல் டி மரியா’ என வலுவான கூட்டணி அமையும். தவிர, இந்த ஆண்டுடன் ஒப்பந்தம் முடியவுள்ள எம்பாப்வேயை கழற்றி விட்டு, மெஸ்சியை தக்கவைக்கவும் அணி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: