நீண்ட நேரம் உட்கார்ந்தால் மூளைக்கு ஆபத்தா?

Spread the loveImages

  • sitting

    படம்: Pixabay 

நீண்ட நேரம் அசைவில்லாமல் உட்கார்ந்தால் மூளைக்கு ஆபத்து உள்ளது என்கிறது புதிய ஆய்வு. அவ்வாறு செய்வதால் இரத்தவோட்டம் மெதுவடைந்து மூளைக்கு நீண்டகால பாதிப்பு ஏற்படலாம்.

ஆனால் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்திருந்து சிறிது நேரம் உலவினால்கூட அந்த பாதிப்பைத் தவிர்க்கலாம். அதற்கு வெறும் 2 நிமிடம் செலவிட்டால் போதும், இரத்தவோட்டம் அதிகரிக்கும்.

மூளை உயிரணுக்களுக்குத் தேவையான உயிர்வாயு, ஊட்டச் சத்து ஆகியவை குருதியில் அடங்கியுள்ளன.

அது போதுமான அளவு மூளைக்குப் போகவில்லையென்றால், குறுகிய நேரத்துக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம்.

நீண்ட நேரம் அசைவின்றி அமர்ந்திருப்பதையே பழக்கமாகக் கொண்டிருந்தால், முதுமை மறதி உள்ளிட்ட நீண்டகால பாதிப்புகளுக்கு அது இட்டுச் செல்லக் கூடுமென எச்சரிக்கப்படுகிறது.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: