நிலவில் மனிதன்…50 ஆண்டு நிறைவு – TamilSeithi News & Current Affairs

Spread the love



மனிதன் நிலவில் காலெடுத்து வைத்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங், அவரைத் தொடர்ந்து எட்வின் ஆல்டிரின் இருவரும் நிலவில் உலவிய முதல் 2 மனிதர்கள் என்ற பெருமையைப் பெற்றனர்.

21 மணி 36 நிமிடங்கள் அவர்கள் நிலவில் பல்வேறு ஆய்வுகளை நடத்தினர்.

அவர்களுடன் சென்ற மைக்கல் கோலின்ஸ் நிலவில் கால் பதிக்கவில்லை; ஆனால் விண்கலத்திலிருந்து நாசாவிற்கான தொலைத் தொடர்பைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தார்.

விண்வெளிக்கு முதலில் மனிதனை அனுப்பியது அப்போது சோவியத் யூனியன் என்றழைக்கப்பட்ட ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்பு என்றாலும் நிலவுக்கு அனுப்பியது அமெரிக்காதான்.

அந்தப் பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்தே மேற்கத்திய நாடுகளும், ஆசிய நாடுகளும் இன்னும் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் ஆர்வத்தைத் தொடர்கின்றன.

2024ஆம் ஆண்டில் நாசா தனது அடுத்த நிலாப் பயணத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறது. 





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *